செய்திகள்
கைது

காவேரிபட்டணம் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல்- டிரைவர் கைது

Published On 2019-08-18 16:44 GMT   |   Update On 2019-08-18 16:44 GMT
காவேரிபட்டணம் அருகே திருமணம் செய்யும் நோக்கில் பிளஸ் 2 மாணவியை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அருகே உள்ள செட்டிமரம்பட்டி பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

இந்நிலையில் பள்ளி விடுமுறையில் வீட்டிற்கு வந்த அந்த மாணவி கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர்கள், பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் கொடுத்தார். 

அந்த புகாரை பெற்று கொண்ட சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவியை அந்த மாணவியின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரபாகரன் (24) என்பவர் திருமணம் செய்யும் நோக்கத்தில் அந்த மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

 இது குறித்து பிரபாகரன் மீது சிறுமி கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News