செய்திகள்
கைது

பெரம்பலூரில் போக்சோ சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது

Published On 2019-08-15 10:23 GMT   |   Update On 2019-08-15 10:23 GMT
பெரம்பலூர் அருகே பிளஸ் டூ மாணவியை கடத்தியது தொடர்பாக 4 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள  கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ் டூ மாணவி (வயது 17).  இவரை மருவத்தூர் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் தமிழ்ச்செல்வன்  (வயது 21) என்பவர் காதலித்து வந்தார். இவர் ஐ.டி.ஐ. படித்து உள்ளார்.
பின்னர் கடந்த மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தமிழ்ச்செல்வன்  கடத்திச் சென்றார்.  இதுகுறித்து சிறுமியின் தாயார் கடந்த 19ம் தேதி மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின்  பேரில் தமிழ்செல்வனின் நண்பர்களான சித்தளி செல்வராசு (25),  பேரளி வேல்முருகன் (25), பெரம்பலூர் அரவிந்த்சாமி (27) ஆகிய மூன்று பேரும் சிறுமியை கடத்துவதற்கு உடந்தையாகவும், வெளியூருக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தற்காகவும், தூத்துக்குடியில் வீடு எடுத்து தங்க வைத்து குற்றசெயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மருவத்தூர் போலீசார் நேற்று முன் தினம்  தமிழ்ச்செல்வன் மற்றும் சிறுமியை கைது செய்து அழைத்து  வந்தனர். மருவத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ்செல்வன், செல்வராஜ், வேல்முருகன், அரவிந்தசாமி ஆகிய 4 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  மேலும் சிறுமிக்கு மருத்துவபரிசோதனை நடைபெற உள்ளது.
Tags:    

Similar News