செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 45 ஆயிரம் பயணிகள் ஷேர் ஆட்டோ, டாக்சியில் பயணம்

Published On 2019-08-08 09:21 GMT   |   Update On 2019-08-08 09:21 GMT
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி வசதியினை ஜூலை மாதத்தில் 44,974 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பஸ்-புறநகர் ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி சேவை வழங்கப்படுகின்றன.

ஜூலை மாதத்தில் இந்த வசதியினை 44,974 பேர் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 4 லட்சத்து 40 ஆயிரத்து 87 பயணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஜூலை மாதம் 2019 வரை பயணித்துள்ளனர்.

ஷேர் ஆட்டோவில் மட்டும் 38,473 பேரும், ஷேர் டாக்சியில் 6501 பேரும் பயணம் செய்துள்ளனர். கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் அதிக பயணிகள் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தியுள்ளனர். மற்ற நிலையங்களைவிட அங்கு தான் அதிகளவு பயணிகள் சென்றுள்ளனர். அடுத்ததாக திருமங்கலம் நிலையத்தில் 6752 பேர் பயணம் செய்துள்ளனர்.

ஷேர் ஆட்டோ, டாக்சி வசதியுடன் தற்போது சிறிய கார் வசதியும் அளிக்கப்படுகிறது. சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏ.ஜி.டி.எம்.ஸ்., நந்தனம் ஆகிய 6 மெட்ரோ நிலையங்களில் இது தொடங்கப்பட்டுள்ளது.

6 முதல் 8 கி.மீ. தூரம் வரை இச்சேவையை பயன்படுத்த ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் பயண அட்டை மற்றும் செயலி மூலமாக இதற்கான கட்டணத்தை செலுத்தி வசதியை பெறலாம். மற்ற மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் இந்த வசதி விரிவுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News