செய்திகள்
கொள்ளை நடந்த கடை முன்பு கூடியிருந்த மக்கள் கூட்டம்.

தேவாரத்தில் அடுத்தடுத்த கடைகளில் பணம்-செல்போன்கள் திருட்டு

Published On 2019-08-03 06:05 GMT   |   Update On 2019-08-03 06:05 GMT
தேவாரத்தில் அடுத்தடுத்த 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரம் பழைய மார்க்கெட் வீதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருபவர் சுரேஷ். இவர் புதிய செல்போன்கள் வாங்குவதற்காக கடையில் ரூ.50 ஆயிரம் வைத்திருந்தார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்றனர்.

மற்றொரு சம்பவம்...

மேலும் இதன் அருகிலேயே மாலதி ஜெயராஜ் என்பவர் கருவாட்டு கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டு செலவுக்காக நேற்று ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி வைத்திருந்தார். இந்த கடையிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அந்த பணத்தை எடுத்துச் சென்றனர். இன்று காலை கடையின் பூட்டு திறந்து கிடப்பதை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

கடந்த வாரம் தேவாரம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த திருட்டிலும் இதுவரை யாரும் பிடிபடவில்லை. தற்போது இன்று அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. தேவாரம் பகுதியில் அடுத்தடுத்து நடந்து வரும் கொள்ளை சம்பவங்கள் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



Tags:    

Similar News