செய்திகள்
சேதமான பேருந்து பணிமனை ஓய்வறை

வடபழனி பணிமனையில் 2 பேர் பலியானதற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் கைது

Published On 2019-07-28 08:22 GMT   |   Update On 2019-07-28 08:22 GMT
வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்த விபத்தில் 2 பேர் பலியானதற்கு காரணமான ஓட்டுனர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனை பேருந்துகளில் நேற்று நள்ளிரவு பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பணிமனையில் உள்ள தொழிலாளர்கள் தங்கிய அறையின் சுவர் மீதி மோதியது. இந்த விபத்தில் பணிமனை ஊழியர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து கழக இணை நிர்வாக இயக்குனர் இளங்கோ ஆகியோர் விபத்து நடந்த பணிமனையில் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், சென்னை வடபழனி பணிமனை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி பெற்று தர முதல் அமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.



இந்நிலையில், வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்த விபத்தில் 2 பேர் பலியானதற்கு காரணமான ஓட்டுனர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். பணியில் கவனக்குறைவாக இருந்து மரணம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News