செய்திகள்
உதவி கலெக்டர் மணிராஜிடம் பொதுமக்கள் மனு கொடுத்த காட்சி

சட்ட விரோதமாக இயங்கும் சாய ஆலையை மூட வேண்டும் - உதவி கலெக்டரிடம், பொதுமக்கள் மனு

Published On 2019-07-24 18:25 GMT   |   Update On 2019-07-24 18:25 GMT
சட்ட விரோதமாக இயங்கும் சாய ஆலையை மூட வேண்டும் என உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று உதவி கலெக்டர் மணிராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விட்டம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சாயஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கழிவுகளால் நிலத்தடி நீர் மற்றும் விவசாய பாசனநீர் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. இதுகுறித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆலையை மூட தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக சாய ஆலை இயங்குகிறது. இதை முழுமையாக தடுத்து நிறுத்தி அதன் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் மணிராஜ், விட்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
Tags:    

Similar News