செய்திகள்
மணல் கடத்தல்

கோவில் நிலத்தில் மணல் கடத்தும் கும்பல் - டிராக்டரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

Published On 2019-07-24 11:41 GMT   |   Update On 2019-07-24 11:41 GMT
முத்துப்பேட்டை அருகே கோவில் நிலத்தில் மணல் அள்ளி கடத்தும் கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக ஏராளமான மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. ஆறுகளின் அருகே இப்பகுதியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் ரகசியமாக மணல் குவாரிகள் அமைத்து பெரியளவில் மணல் விற்பனை செய்து வருகின்றனர். இதில் அதிகளவில் தம்பிக்கோட்டை பகுதியில் தான் மணல் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இதில் அவ்வபோது மணல் கடத்திய ஏராளமான லாரிகள், டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களும் போலீசாரால் கைது செய்து நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டும் வருகிறது. இருந்தும் போலீசாரின் கண்ணில் மண்ணைத்தூவிட்டு மணல் கடத்தும் சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் கொடிக்கட்டி பறக்கிறது.

இந்த பகுதியின் நிலைமை இப்படி இருக்க மறுபுறம் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் சற்குணநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இடும்பவனத்தை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நிலங்கள் உள்ளது. இதில் கட்டிடத்திற்கு தேவையான மணல்கள் மற்றும் சிலிக்கான், சிலிக்கேட் மணல்களும் பரவலாக உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரகசியமாக கடத்தி கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த தொடர் மணல் கொள்ளை தொடர்பாக இடும்பாவனம் சற்குணநாதர் கோவலில் புதியதாக பொறுப்பேற்ற செயல்அலுவலர் முருகையன் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து சமீபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிரடி நடவடிக்கையின் காரணமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் லாரிகள், டிராக்டர்கள் பிடிப்பட்டு வருகிறது. இடும்பாவனம் காடுவெட்டி பகுதியில் கண்காணித்து வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஒரு தென்னந்தோப்பில் ஒரு கும்பல் மணல் திருடி வந்தது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார். போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓடியது. இதனையடுத்து மணல் கடத்திய ஒரு டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்த போலீசார் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News