செய்திகள்
திருட்டு நடந்த கடையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.

கரூர் பஸ் நிலையம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

Published On 2019-07-11 18:16 GMT   |   Update On 2019-07-11 18:16 GMT
கரூர் பஸ் நிலையம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:

கரூர் பஸ் நிலையம் அருகே திலிப்சிங் என்பவர் சொந்தமாக எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் வீடுகளுக்கு தேவையான லைட் மற்றும் வயரிங் சாமான்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் திலிப்சிங் கடையின் வியாபாரம் முடிந்தவுடன் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க திலிப்சிங் வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த திலிப்சிங் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் உள்ளே கல்லாவில் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News