செய்திகள்
கைது

கோயம்பேட்டில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு - 2 பேர் கைது

Published On 2019-07-10 06:48 GMT   |   Update On 2019-07-10 06:48 GMT
கோயம்பேட்டில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ்வரன் (70). பெட்ரோல் பங்க் ஊழியர்.

நேற்று இரவு 11மணி அளவில் அவர் வேலைக்கு செல்வதற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சைலேஷ்வரனை வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றனர்.

அதனை கொடுக்க மறுத்த சைலேஷ்வரனை சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் ரூ 3330 பணம் ஆகியவற்றை பறித்து 2 பேரும் தப்பி சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் சைலேஷ்வரன் வாய் கிழிந்தது.

இதுகுறித்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் கோயம்பேடு போலீசாருக்கு கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை தெரிவித்தனர்.

கோயம்பேடு மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட்ட இன்ஸ்பெக்டர் தீபக்குமார் மற்றும் போலீசார் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்கள் திருமங்கலம் பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் விக்னேஷ் வரன் என்பது தெரிந்தது அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது

Tags:    

Similar News