செய்திகள்
விபத்தில் என்ஜினீயர் பலி

திண்டுக்கல் அருகே ஆம்புலன்ஸ் மோதி என்ஜினீயர் பலி

Published On 2019-06-30 14:37 GMT   |   Update On 2019-06-30 14:37 GMT
திண்டுக்கல் அருகே ஆம்புலன்ஸ் மோதி என்ஜினீயர் பரிதாபமாக பலியானார்.

ஆத்தூர்:

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50). இவர் துபாயில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். ரவீந்திரனின் மகள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

அவரை அழைத்து வருவதற்காக ரவீந்திரன் போடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். ஆனால் தாமதமானதால் அவரது மகள் பஸ் மூலம் போடிக்கு சென்று விட்டார்.

இதனால் ரவீந்திரன் மட்டும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து போடி நோக்கி சென்றார்

செம்பட்டியை அடுத்து சித்தையன்கோட்டை வீரசிக்கம்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே வந்த தனியார் ஆம்புலன்ஸ் ரவீந்திரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீரசிக்கம்பட்டி பிரிவு பகுதியில் வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்புகளும் தொடர்ந்து வருவதால் இப்பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News