செய்திகள்

பட்டானூர் பகுதியில் இருந்து தண்ணீர் கடத்திய டேங்கர் லாரி பறிமுதல்

Published On 2019-06-26 13:57 GMT   |   Update On 2019-06-26 13:57 GMT
பட்டானூர் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் தண்ணீர் கடத்திய டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
சேதராப்பட்டு:

புதுவை பட்டானூர் அருகே சர்வீஸ் சாலையில் தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த டேங்கர் முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. 

அப்போது அந்த வழியாக வந்த ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு லாரியை மடக்கி சோதனையிட்டார். சோதனையில் எந்த வித உரிமமும் பெறாமல் தண்ணீர் எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து மூல குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் வில்லியம் சேவியரை கைது செய்தார். பட்டானூரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்வது தெரியவந்தது. 

உரிய அனுமதி பெறாமல் எடுத்து சென்றதால் தண்ணீரை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

பட்டானூர் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன. இதனால் அதை தடுக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News