செய்திகள்

திருவொற்றியூரில் ரேசன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

Published On 2019-06-24 09:50 GMT   |   Update On 2019-06-24 09:50 GMT
திருவொற்றியூரில் சரிவர பொருட்கள் வழங்க வலியுறுத்தி ரேசன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:

திருவொற்றியூர் பூம்புகார் நகர் மேற்கு பகுதியில் அமுதம் அங்காடி ரேசன் கடை உள்ளது. இங்கு சுமார் 850 குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருள் விநியோகம் செய்யப்படுகிறது.

இங்கு சரிவர பொருட்கள் வழங்கப்படவில்லை. சில பொருட்களை வாங்கும்படி குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் பெண்களை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதாக வும் புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை ஏராளமான பெண்கள் இந்த ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே ஊழியர் கடையை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தார்.

2 மணி நேரம் கழித்து மீண் டும் கடை திறக்கப்பட்டது. உடனே அங்கு திரண்ட பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் கடை மூடப்பட்டது.

உடனே போலீசாரும், குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இச்சம்பவத் தால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News