செய்திகள்

குமரியில் அனுமதியின்றி மது விற்பனை: 154 மது பாட்டில்கள் பறிமுதல் - 5 பேர் கைது

Published On 2019-06-15 12:48 GMT   |   Update On 2019-06-15 12:48 GMT
குமரியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 154 மது பாட்டில்கள், ரூ.12,650 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:

மார்த்தாண்டம் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் தலைமையிலான போலீசார் கழுவந்திட்டை சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த ராஜகோபால் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 71 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் தலைமையிலான போலீசார் வடலி விளை வயல் தெருவில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த ஏசுதாஸ் (66) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொற்றியோடு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரபாபு தலைமையிலான போலீசார் வேர்கிளம்பி சந்திப்பில் ரோந்து சென்றபோது அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த செல்வின் (55) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 மது பாட்டில்கள், 12,650 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட் டது.

ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா தலைமையிலான போலீசார் பால்கிணற்றான்விளை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு மது விற்றுக் கொண்டிருந்த ரவி (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் தலைமையிலான போலீசார் பாலப்பள்ளம் கூத்த குழிவிளை பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக ரமேஷ் (34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News