search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 arrest"

    செங்குன்றம் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த தம்பியை அடித்து கொன்ற அக்காள்-கணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ள மாவுத்கான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 37). கூலி தொழிலாளி. இவரது அக்காள் தனலட்சுமி (வயது 42). இவரது கணவர் ரவி (51). இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    பூபாலனுக்கு திருமணம் ஆகாததால் அக்கா தனலட்சுமியின் வீட்டிலேயே வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பூபாலன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

    மதுவுக்கு அடிமையான அவர் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு அக்காளை தொந்தரவு செய்து வந்தார்

    நேற்று முன்தினம் இரவு பூபாலன் மதுபோதையில் வீட்டுக்கு சென்றார். மேலும் மது குடிப்பதற்காக அக்காவிடம் பணம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி, கணவர் ரவி, அவர்களின் மகள்கள் வெண்மதி, மஞ்சு, மகன் வல்லரசு ஆகியோர் சேர்ந்து பூபாலனை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் பயந்து போன அவர்கள் பூபாலன் மீது இருந்த ரத்த காயங்களை மறைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்ததாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

    பின்னர் பூபாலனின் இறுதி சடங்கிற்காக ஏற்பாடுகள் நடந்தன. அப்போது தனலட்சுமி மற்றும் அவர்களின் குடும்பதினரின் நடவடிக்கையால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு விரைந்து சென்று பூபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை செய்த போது பூபாலனை கொலை செய்ததை தனலட்சுமியும், அவரது குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, அவரது கணவர் ரவி, மகன் வல்லரசு, மகள்கள் வெண்மதி, மஞ்சு ஆகியோரை கைது செய்தனர்.
    ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறித்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை செயின்ட் பால்ஸ் ரோட்டை சேர்ந்தவர் நம்பி. இவரது மனைவி கன்னுத்தாய் (வயது55).

    இவர் சம்பவத்தன்று மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்க புரத்தில் இருந்து சந்தை ரவுண்டானா பகுதிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    பஸ்சை விட்டு இறங்கும் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 14 கிராம் தங்க செயினை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ செயினை திருடியதை அறிந்து மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆன்டனி ஜெகதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினார்.

    அதில் திருட்டு சம்பவம் நடந்த பஸ்சில் இருந்து சந்தேகப்படும் படியாக 3 பெண்கள் இறங்கி அருகில் நின்ற காரில் ஏறி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவெண் மதுரையை சேர்ந்ததாக இருந்தது.

    இதையடுத்து அந்த பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த கார் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு சென்று காரை மடக்கி பிடித்தனர்.

    அதில் இருந்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து அவர்களை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே உள்ள மேட்டுபட்டி மஞ்சுமலை கோவில் தெருவை சேர்ந்த வெள்ளச்சாமி (வயது47), இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ (36), ஆறுமுகசெல்வி (42), வாடிபட்டி அருகே உள்ள பெரிய ஊர் சேரியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மனைவி ஜீவா (47), அவரது மகன் ரஞ்சித் குமார் (29) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 5 பேரும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகளை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களாகவே மதுரையில் இருந்து ஒரே காரில் 5 பேரும் நெல்லைக்கு வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தினமும் அதிகாலையி லேயே காரில் புறப்பட்டு நெல்லைக்கு வந்து விடுவோம். மாநகர பகுதிக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து பெண்கள் 3 பேரும் கைக்குழந்தையுடன் கூட்டம் அதிகமான பஸ்களில் ஏற்றி விடுவோம்.

    கூட்டத்தில் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பெண் பயணிகளின் கழுத்தை நோட்டமிட்டு அவர்களிடம் கைக்குழந்தையை வைத்திருக்குமாறு கொடுப்பார்கள். பின்னர் லாவகமாக பயணிகளுக்கு தெரியாமலேயே அவர்கள் கழுத்தில் கிடக்கும் நகையை நைசாக பறித்து விட்டு குழந்தையுடன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவார்கள்.

    நாங்கள் அந்த பஸ்சுக்கு பின்னாலேயே காரில் செல்வோம். 3 பெண்களும் பஸ்சை விட்டு இறங்கியதும் அவர்களை காரில் ஏற்றி கொண்டு தப்பி சென்று விடுவோம். பின்னர் அந்த நகைகளை மதுரைக்கு கொண்டு சென்று விற்ற பணத்தை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். தற்போது சி.சி.டி.வி. காமிரா மூலம் நாங்கள் சிக்கி கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கைதான ஆறுமுக செல்வி, ஜெயஸ்ரீ, ஜீவா ஆகியோரை கொக்கிர குளம் மகளிர் சிறையிலும், வெள்ளைச்சாமி, ரஞ்சித் குமார் ஆகியோரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர். திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
    2 தலையுள்ள பாம்புகளை வாங்கி வந்து கேரளாவில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோழிக்கோடு வனத்துறை விஜிலன்ஸ் (டி.எப்.ஓ) அதிகாரியான சுனில் குமாருக்கு, ஒரு கும்பல் 2 தலையுள்ள பாம்பினை கடத்தி வந்து கேரளாவில் ஒரு வீட்டில் விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் 5 பேர் கும்பல் இருந்தனர். வனத்துறையினர் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து அவர்களை மடக்கி பிடித்தனர்.மேலும் அந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் 2 தலைகள் கொண்டதுபோல் காணப்படும் மண்ணுள்ளி பாம்புகள் இரண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை மீட்டனர்.

    தொடர்ந்து அங்கிருந்தவ ர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்தவர் ராஜாமுகமது(39). மலப்புரம் எலங்கூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்(42) எடவன்னம் பகுதியை சேர்ந்தவர் கமருதீன்(40) காசர்கோட்டை சேர்ந்தவர் அனிபா முகமது(46). ஆலப்புழா சேர்த்தலாவை சேர்ந்தவர் ஆனந்தன்(28) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 5 பேரும் திருப்பூரிலிருந்து 2 லட்சம் ரூபாயை கொடுத்து 2 தலையுள்ள பாம்புகளை வாங்கி வந்து கேரளாவில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் பாம்பை வாங்குவதாக கூறிய நபரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    மதுரை அருகே வாலிபர் கொலையில் சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தட்டான்குளம்-நரசிங்கம் ரோட்டில், அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு செல்லும் வழியில், ஏ.பி.மலையாண்டிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தவசி (வயது 21) என்பவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை யார், எதற்காக வெட்டிக் கொன்றார்கள்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக் குமரன் ஆலோசனை பேரில், கே.புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தவசி நண்பர்கள் சிலரிடம் விசாரித்தனர்.

    அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவன் உள்பட 5 நண்பர்களை பிடித்து வந்து, காவல் நிலையத்தில் விசாரித்தனர்.

    இதில் அவர்கள் ஒத்தக்கடை, அரும்பனூர் புதூர், குமார் மகன் பாண்டியராஜன் என்ற சடையன் (21), நரசிங்கம் ராஜீவ்காந்தி நகர் அய்யனார் (27), மலையாண்டிபுரம் காளிமுத்து மகன் ராஜா (24), ஆண்டார் கொட்டாரம், சந்திரலேகா நகர் மணிமாறன் (32) மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    தனிப்படை போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறுவன் உள்பட 5 பேரும் தனிப்படை போலீசாரிடம் கொடுத்து உள்ள வாக்குமூலத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்களும் தவசியும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம். அவர் மாட்டுத்தாவணி ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு தண்ணீர் லாரி டிரைவர்களுடன் நட்பு உண்டு. எனவே தவசியிடம் அய்யனாரின் 15 வயது தம்பிக்கு லாரி கிளீனர் வேலை கேட்டோம். இதற்காக அவருக்கு அடிக்கடி மதுபானம் வாங்கி கொடுத்தோம்.

    இருந்தபோதிலும் தவசி வேலை வாங்கித் தரவில்லை. அதேநேரத்தில் சந்திக்கும்போது எல்லாம் ஓசி மதுபானம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் எங்களுக்கு அவர் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று தட்டான்குளம் சாலையில் தவசியுடன் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது நாங்கள் அவரிடம் மீண்டும் அய்யனார் தம்பிக்கு லாரி கிளீனர் வேலை வாங்கி தருமாறு கேட்டோம். அப்போது “உங்களை எல்லாம் நம்பி அவனுக்கு எப்படி வேலை வாங்கித் தருவது?’ என்று தவசி நக்கலாக கேட்டார். இதனால் எங்களுக்குள் கடும் கோபம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கினோம். அதில் தவசி இறந்து போவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதன்பிறகு நாங்கள் அனைவரும் வீட்டுக்கு வந்து விட்டோம். அடுத்த நாள் காலையில் தான் தவசி இறந்து போன விவரம் எங்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நாங்கள் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்து வந்தோம். இருந்தபோதிலும் போலீசார் எங்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.

    போலீசார் 5 பேரையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள். 
    இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் போட்டோ வெளியிட்ட கட்டிட தொழிலாளியை வெட்டி கொலை செய்த வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமா நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 27). கட்டிட தொழிலாளி.

    இவருக்கும் பக்கத்து வீதியை சேர்ந்த மணி, புலியகுளத்தை சேர்ந்த விக்கு சண்முகம் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. அசோக்குமார் பீளமேட்டை சேர்ந்த உன்னி, சிவபாலன், ரித்தீஷ் ஆகியோருடன் நண்பராக பழகி வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கு சண்முகம், மணி ஆகியோர் கட்டபஞ்சாயத்து செய்தனர். இதனை அசோக்குமார் தனது நண்பர்களாக உன்னி, சிவபாலன், ரித்திஷ் ஆகியோருடன் சேர்ந்து கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்தநிலையில் அசோக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் தனது புகைப்படத்தை பதிவிட்டார். புகைப்படத்துடன் எங்க ஏரியாவில் வந்து போட்டு பாருங்க என பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த மணி, விக்கு சண்முகம் ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    சம்பவத்தன்று அசோக்குமார் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். இதனை பார்த்த விக்கு சண்முகம் தனது நண்பர்களாக மணி, சிவா, பாபு, அமர்நாத் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் அரிவாள், கத்தியுடன் 2 மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்தனர்.

    மது குடித்த பின்னர் அசோக்குமார் தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை 3 மோட் டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து சென்றனர். அருகில் சென்றபோது விக்கு சண்முகம் தான் வைத்து இருந்த அரிவாளை எடுத்து அசோக்குமாரின் தலையில் வெட்டினார். இதில் நிலை குலைந்த அவர் கீழே சரிந்தார்.

    பின்னர் கும்பல் ஒன்றாக சேர்ந்து மார்பு, தலை, கால் ஆகியவற்றில் வெட்டினர். பின்னர் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அசோக்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். மேலும் முன் விரோதத்தில் தொழிலாளியை வெட்டி கொலை செய்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று இரவு இந்த கொலை வழக்கில் தொடர்பு டைய விக்கு சண்முகம் உள்பட 5 பேரை சரவணம் பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் விடுமுறை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 68 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    நாடு முழுவதும் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பானங்களை வாங்கி விற்பனை செய்ய முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து பெரிய நாயக்கன்பாளையம், பேரூர், தொண்டாமுதூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் மதுபானங்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த பூமிநாதன் (38), மதுக்கரை ராமலிங்கம் (34), நீலாம்பூர் குமார் (26), பெரிய நாயக்கன் பாளையம் தமிழரசன் (27), செம்மேடு மந்திரப்பன் (67) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 68 பாட்டில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ரூ. 5 கோடி ஹவாலா பணம் கடத்திய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney
    கோவை:

    கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அவர் போலீசாருடன் வனவக்கோடு ரெயில் நிலையம் சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வட மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு ரெயில் வந்தது.

    ரெயில்வே போலீசார் உதவியுடன் அந்த ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் இருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.

    அவர்களது மேல் சட்டையில் சோதனை செய்த போது சட்டை போல் உள்ளே பனியன் அணிந்து இருந்தனர். அதில் ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது. ரூ. 2 கோடி பணத்தை அவர்கள் பனியனில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்கள் கொல்லத்தை சேர்ந்த சுரேந்திரன், விவேக், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பதாம் சிங், பிரமோத், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிய வந்தது.

    இந்த பணத்தை கோவையில் இருந்து கொல்லத்துக்கு கடத்தி சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் பல முறை இவர்கள் ஹவாலா பணத்தை கேரளாவுக்கு கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிடம் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கோவையில் யாரிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #HawalaMoney
    ஈரோடு அருகே உள்ள வீரப்பன்சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் ஆயிரக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் பணம் வைத்து சூதாடிய ஈரோடு மாவட்டம் பொய்க்குற்றம் சாட்டி கணவருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து எஸ்.பி. சக்தி கணேசன் உத்தரவின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரம் அதியமான் வீதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சுந்தரமூர்த்தி (40), குமார் (42), பழனிச்சாமி (48), தன்சுக் (44), தங்கராஜ் (40) என தெரியவந்தது. இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளும் ரூ.78 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஆயுதங்களுடன் மாமூல் கேட்டு மிரட்டியதாக 5 பேரை கைது செய்த போலீசார் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளரிக்குளம் கூட்டு சாலையில் 5 வாலிபர்கள் ஒரு மினி லாரியை மடக்கி பிடித்து தகராறில் ஈடுபட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விபத்து நடந்ததாக நினைத்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் இருந்த 2 வாலிபர்கள் திடீரென தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை அறிந்த திருவூர் பகுதியை சேர்ந்த டில்லி, சுரேந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோர் மணல் லாரியை மடக்கி மாமூல் பணம் கேட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ஆயுதங்களுடன் மாமூல் கேட்டு மிரட்டியதாக டில்லி உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் லாரியில் மணல் கடத்திய கலாம்பாக்கத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    நாகர்கோவிலில் குடிக்க பணம் இல்லாததால் டாஸ்மாக் கடையில் திருடியதாக கைதான சகோதரர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் நாடான்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சுவரில் துழைபோட்டு 63 மதுபாட்டில்கள் திருடப்பட்டது.

    இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருவள்ளுவர் தின விடுமுறை நாளிலும் அதே பகுதியை சேர்ந்த சிலர் மதுபானங்களை அதிகளவு பதுக்கிவைத்து குடித்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக அழகன்பாறை, அழகர்கோணத்தை சேர்ந்த சங்கர் (வயது 25) மற்றும் அவரது 18 வயது சகோதரர் ஒருவரும், தங்கத்துரை (28), மணிவண்ணன் (23) மற்றொரு 16 வயது சிறுவனையும் பிடித்தனர். இவர்கள் டாஸ்மாக் கடையில் திருடியதை ஒப்புக் கொண்டனர். போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு குடிக்க பணம் இல்லாததால் ஒதுக்குப்புறம் பகுதியில் டாஸ்மாக் கடையில் திருடுவதற்கு திட்டமிட்டோம். சம்பவத்தன்று டாஸ்டாக் கடையின் பின் பக்க சுவரை துளைபோட்டோம். பின்னர் நாங்கள் அந்த துளை வழியாக உள்ளே புகுந்து விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை திருடினோம். அந்த பகுதியில் இருந்து மது அருந்தினோம். மீதம் இருந்த மதுபாட்டில் களை மறைத்துவைத்தோம். டாஸ்மாக் விடுமுறைதினமான திருவள்ளுவர் தினத்தன்றும் நாங்கள் அதிகமாக மது அருந்திக்கொண்டு இருந்தோம். அப்போது போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனில் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்றொரு சிறுவனை நெல்லையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தங்கத்துரை, சங்கர், மணிவண்ணன் ஆகிய 3 பேரை ஜெயிலில் அடைத்தனர். சங்கர் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி, கோட்டார் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. தங்கத்துரை மீது நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். #tamilnews
    ×