செய்திகள்

எம்.ஜி.ஆர். நகரில் திமுக பிரமுகர் கார் டிரைவரை கடத்தி கொள்ளை- 2 பேர் கைது

Published On 2019-06-01 06:41 GMT   |   Update On 2019-06-01 06:41 GMT
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தி.மு.க. பிரமுகரின் கார் டிரைவரை கடத்தி கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

கே.கே. நகர் முனுசாமி சாலையை சேர்ந்தவர் துரைராஜ் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். இவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வருபவர் அசோக்குமார்.

அசோக் குமார் நேற்று மாலை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தில்பாண்டியன், வில்லிவாக்கம் திரு.வி.க நகரைச் சேர்ந்த லோகேஷ் ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினார். அப்போது உடன் இருந்த அசோக்குமாரிடம் மேலும் மது வாங்கி தரச்சொல்லி தகராறில் ஈடுபட்டனர். பணம் கேட்டு மிரட்டினார்கள். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று அசோக்குமார் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் திடீரென அசோக் குமாரை காரில் ஏற்றி கடத்தி சென்று சரமாரியாக தாக்கினர். அவரிடமிருந்த ரூ.700-ஐ பறித்தனர். பின்னர் 100 அடி சாலையில் உள்ள ஹோட்டல் முன்பு இறக்கி விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து அசோக்குமார் துரைராஜ்க்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக எம்.ஜி.ஆர். நகர் போலீசில் துரைராஜ் புகார் அளித்தார். உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம் இன்ஸ்பெக்டர் பிராங்க் ரூபன் ஆகியோர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் எண்ணை கொண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

நேற்று இரவு சாலிகிராமம் பகுதியில் பதுங்கி இருந்த தில்பாண்டி, லோகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட தில்பாண்டியன், லோகேஷ் மீது கொலை கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
Tags:    

Similar News