செய்திகள்

சென்னையில் சி.பி.எஸ்.இ. தேர்ச்சி விகிதம் குறைந்தது

Published On 2019-05-03 09:39 GMT   |   Update On 2019-05-03 09:39 GMT
சென்னை நகரின் பெரும்பாலான பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு பெறும் சி.பி.எஸ்.இ. மாணவ- மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. #Plus2 #CBSE
சென்னை:

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 17 ஆயிரத்து 693 பேர் 95 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். 94 ஆயிரத்து 299 பேர் 90 சதவீத மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். பாடங்களில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஒவ்வொரு பாடங்களிலும் 95 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மாணவ- மாணவிகளில் பெரும்பாலானோர் 80 சதவீத மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளனர்.

நகரின் பெரும்பாலான பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு பெறும் சி.பி.எஸ்.இ. மாணவ- மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாணவ- மாணவிகளின் அதிகபட்ச மதிப்பெண் 485 முதல் 489 வரைதான் உள்ளது.

இதுபற்றி ஒரு தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கூறும் போது, “கடந்த ஆண்டு எங்கள் பள்ளியில் அறிவியல், கணக்கு, கம்யூட்டர் சைன்ஸ், கணக்கு பதிவியல் பாடங்களில் பல மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 3 மாணவர்கள் கணக்கு பாடத்தில் மட்டும் 100 மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள்” என்றார். மற்றொரு பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். பல மாணவர்கள் 99 மற்றும் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேர்வுத்தாள் திருத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே, மதிப்பெண் குறைவதற்கும், தேர்ச்சி விகிதம் குறைவதற்கும் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:-

சி.பி.எஸ்.இ. தேர்வு தாள்களை திருத்துபவர்கள் சரியான விடைகளுக்கு மட்டுமே முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தவறான பதிலுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால்தான் தேர்ச்சி விகிதம் குறைந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Plus2 #CBSE
Tags:    

Similar News