செய்திகள்

திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை

Published On 2019-04-27 12:24 GMT   |   Update On 2019-04-27 12:24 GMT
திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. போலீசார் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் ரெயில்நிலையப்பகுதியில் போலிச்சாமியார்கள் அதிகளவில் உலாவி வருகின்றனர். குட்செட் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்த போதும் கஞ்சாவிற்பனையை தடுக்க முடியவில்லை.

குறிப்பாக கல்லூரி மாணவர்கள் ஒருமுறை புகைத்தால் மீண்டும் அதை தேடிவரும் நிலை உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலை பின்புறம் தற்போது கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. ஆண்கள் விற்பனையில் ஈடுபட்டால் எளிதில் மாட்டிக்கொள்வோம் என்பதால் பெண்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையை தொடர்ந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்கால் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களுக்கு கஞ்சா புகைப்பது தூண்டுதலாக உள்ளது.

எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கஞ்சாவிற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News