செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 60 பேரிடம் ரூ. 3 கோடி மோசடி

Published On 2019-04-01 11:56 GMT   |   Update On 2019-04-01 11:56 GMT
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்து தலைமறைவானவர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள உடுக்கம் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மதன் குமார் (34).

இவர் தனது பெயரை விநாயக் என மாற்றி சென்னையில் எவர் மேக்ஸ்மேன் பவர் சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.இவர் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 60 பேரிடம் தலா ரூ. 4.50 லட்சம் வீதம் ரூ. 3 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வருடம் சென்னை போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மதன் குமார் தலைமறைவாகி விட்டார். அவர் உடுக்கம் பாளையத்தில் பதுங்கி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனே அவர்கள் உடுக்கம் பாளையம் வந்தனர். அங்கு மதன் குமார் வீட்டை முற்றுகையிட்டனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட வேலூர் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பிரசாத், சதிஷ் ஆகியோர் கூறும் போது, பணம் தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றனர்.

அவர்களை போலீசார் சமரசப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News