செய்திகள்

தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு- 9 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2019-03-21 06:16 GMT   |   Update On 2019-03-21 06:16 GMT
மதுரையில் தினகரன் அலுவலகத்தை எரித்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. #MaduraiDinakaranOffice #FiredCase #MaduraiHC
மதுரை:

கடந்த 2007ம் ஆண்டு மே 9ம் தேதி தினகரன் நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதில் திமுகவில் ஸ்டாலின், கனிமொழியை விட அழகிரிக்கு மிகக் குறைவான ஆதரவே உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அழகிரி ஆதரவாளர்கள் பொங்கி எழுந்தனர்.



இதையடுத்து மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கி, அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேரை கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதையடுத்து சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்து கிழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று ரத்து செய்தது. மேலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #MaduraiDinakaranOffice #FiredCase #MaduraiHC
Tags:    

Similar News