செய்திகள்

பரமத்தி வேலூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்- 3 பேர் கைது

Published On 2019-03-11 17:16 GMT   |   Update On 2019-03-11 17:16 GMT
பரமத்தி வேலூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் எஸ்.பி. அருளரசுவுக்கு, பரமத்தி வேலூர் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்தி செல்ல முயல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, பரமத்திவேலூர் டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் எஸ்.ஐ.க்கள் கொண்ட குழுவினர் பரமத்திவேலூர் அருகே உள்ள எல்லைமேடு பகுதியில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சங்கர் என்பவரது இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு லாரியில் 5 யூனிட் அளவிலான மணல் சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. 

இதையடுத்து மோகனூர் ராசிபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் தர்மலிங்கம் (39), நன்செய் இடையாரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் கேசவன்(22) மற்றும் ஈரோட்டை சேர்ந்த லாரி கிளீனர் கோபி (35) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் ஒரு லாரி, ஒரு ஜே.சி.பி.வாகனம் உள்ளிட்ட 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

இதில் போலீசாரைக் கண்டதும் 2 பேர் தப்பி ஓடினர். தொடர்ந்து நன்செய் இடையாறு பகுதியில் அழகுநாச்சியம்மன் கோவில் அருகே சேகர் (45) என்பவரது இடத்தில் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்ல முயன்ற ஒரு லாரியை பறிமுதல் செய்து ஏற்கனவே தப்பி ஓடிய 2 பேர் உள்பட 5 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News