செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் சரிவு- 450 காசுகளாக நிர்ணயம்

Published On 2019-03-01 16:59 GMT   |   Update On 2019-03-01 16:59 GMT
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் சரிவடைந்து 450 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 15 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:-

சென்னை-460, ஐதராபாத்-410, விஜயவாடா, தனுகு-430, பார்வாலா-410, மும்பை-475, மைசூரு-472, பெங்களூரு-450, கொல்கத்தா-482, டெல்லி-435.

கறிக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.65 ஆக சரிவடைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.59-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் முட்டை நுகர்வு பொதுமக்கள் இடையே குறைந்து உள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை குறைய முக்கிய காரணம் ஆகும். பிற மண்டலங்களில் முட்டை விலை குறைந்து வருவதால் அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News