செய்திகள்

சிவகாசியில் ரூ.1 கோடியில் நவீன ஆவின் பாலகம்- ராஜேந்திர பாலாஜி அடிக்கல் நாட்டினார்

Published On 2019-03-01 14:01 GMT   |   Update On 2019-03-01 14:01 GMT
சிவகாசியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நவீன ஆவின் பாலகம் கட்டப்பட உள்ளது. இதனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கல் நாட்டினார். #ministerRajendraBalaji

விருதுநகர்:

சிவகாசியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன ஆவின் பாலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த அரசு கிரா மப்புற விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் பொருளாதாரத்திலும், வாழ்க்கை தரத்திலும் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு சிறந்த திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது.

மேலும் காரியாப்பட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் புதிய ஆவின் நவீன பாலகங்கள் அமைக்கப்பட உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் உபபொருட்கள் பண்ணை அமைக்கப்பட உள்ளது.

அதே போல் விருது நகரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கால்நடை தீவனத் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 30 புதிய ஆவின் பாலகங்கள் திறக்கப்பட உள்ளது. இதே போன்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் நவீன ஆவின் பாலகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் சேகர், துணைப்பதிவாளர் சித்ராதேவி (பால்வளம்), ஆவின் தலைவர் கண்ணன், துணைத்தலைவர் கே.கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News