செய்திகள்

வீடியோ: விமானத்தில் அபினந்தனின் பெற்றோருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பயணிகள்

Published On 2019-03-01 07:41 GMT   |   Update On 2019-03-01 09:11 GMT
பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்படும் இந்திய விமானி அபினந்தனை வரவேற்பதற்காக அவரது பெற்றோர் விமானத்தில் டெல்லிக்கு சென்றபோது சக பயணிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #WelcomeBackAbhinandan #AbhinandanParents
சென்னை:

எல்லையில் நடந்த தாக்குதலின்போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, போர்க்கைதியாக பிடிபட்டுள்ள அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும் அபினந்தனை விடுவிப்பதற்காக ராஜாங்கரீதியாகவும் தீவிர முயற்சி மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, அபினந்தனை விடுவிக்கும்படி வலியுறுத்தினார்.

அதன்பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் மார்ச் 1ம் தேதி விடுவிக்கப்படுவார் என அறிவித்தார். இதையடுத்து இன்று பிற்பகல் வாகா எல்லையில் அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். இதனால் வாகா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அபினந்தனை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.



இதற்கிடையே, அபினந்தனை வரவேற்பதற்காக அவரது தந்தை வர்தமான், தாயார் ஷோபனா ஆகியோர் சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர். சென்னை விமான நிலையத்திற்கு சென்று டெல்லி செல்லும் விமானத்தில் ஏறியதும், சக பயணிகள் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். அவர்களை தங்கள் செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்தனர். நாட்டிற்கு சேவை செய்து நற்பெயர் பெற்றுள்ள மகனால், தங்களுக்கு கிடைத்த வரவேற்பையும், மரியாதையையும் கண்டு பெற்றோர் பூரிப்படைந்தனர்.

எதிரி நாட்டு ராணுவத்திடம் சிக்கியபோதும், தனது உயிரைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் அதிகாரிகளின் கேள்விகளுக்கு நேர்த்தியாகவும் சாமர்த்தியமாகவும் பதில் அளித்த அபினந்தனின் துணிச்சல் வியக்க வைத்தது. தன் பெயர், மதம், சர்வீஸ் எண் தவிர மற்ற எந்த விவரங்களையும் அபினந்தன் வெளியிடவில்லை. அவரது தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ‘அபினந்தன் உண்மையான போர்வீரன், அவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்’ என்று அனைத்து தரப்பினரும் பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது. #WelcomeBackAbhinandan #AbhinandanParents 


Tags:    

Similar News