செய்திகள்

சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

Published On 2019-02-26 09:52 GMT   |   Update On 2019-02-26 09:52 GMT
சொர்னூர் நிலையம் அருகே இன்று காலை சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
கோவை:

சென்னை-மங்களூர் இடையே மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் நேற்று இரவு 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு புறப்பட்டது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் இன்று காலை 6.40 மணியளவில் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சொர்னூர் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தது. அப்போது திடீரென ரெயிலின் 2 பெட்டிகள் பலத்த சத்தத்துடன் தடம் புரண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரெயில் பயணிகள் சத்தம் போட்டனர்.உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை பிரேக் போட்டு நிறுத்தினார்.

ரெயில் தடம் புரண்டபோது ரெயில் பெட்டிகள் சிக்னல் கம்பங்கள் மீது சாய்ந்தது. இதனால் கம்பங்கள் சரிந்து சிக்னல் பாதிப்பு ஏற்பட்டது.

இதில் பயணிகள் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. ரெயில் சொர்னூர் ரெயில் நிலையத்தை நெருங்கும்போது மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Tags:    

Similar News