செய்திகள்

ஆதி திராவிடர் விடுதியை முறையாக பராமரிக்காத வார்டன் ‘சஸ்பெண்டு’

Published On 2019-02-23 14:37 GMT   |   Update On 2019-02-23 14:37 GMT
ஆதி திராவிடர் விடுதி வளாகத்தினை முறையாக பராமரிக்காமல் இருந்த காரணத்திற்காக விடுதி காப்பாளரை கலெக்டர் ‘சஸ்பெண்டு’ செய்ய உத்தரவிட்டார்.
கோவை:

கோவை பாலசுந்தரம் ரோட்டில், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் டாக்டர் அம்பேத்கர் ஆதி திராவிடர் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.

இவ்விடுதியில் 174 கல்லூரி மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இவ்விடுதியின் பராமரிப்பு பணிக்கென ஒரு விடுதிக் காப்பாளர், 3 சமையலர், ஒரு உதவி பணியாளர், ஒரு துப்புறவு பணியாளர் என மொத்தம் 6 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விடுதியில் இன்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது விடுதியின் சமையல் அறை, மாணவர்கள் அறை, கழிப்பறை, மற்றும் விடுதி வளாகம் என ஒவ்வொரு பகுதிகளிலும் கலெக்டர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

இவ்விடுதி வளாகத்தினை முறையாக பராமரிக்காமல் இருந்த காரணத்திற்காக தனது பணியினை சரிவர மேற்கொள்ளாத விடுதி காப்பாளர் ஆர்.ஜெகநாதனை ‘சஸ்பெண்டு’ செய்ய கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.

மேலும், விடுதியினை முறையாக 2 நாட்களுக்குள் சீர்செய்யும்படியும், மாவட்ட கலெக்டர் ராசாமணி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News