செய்திகள்

மதுரையில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2019-02-17 10:11 GMT   |   Update On 2019-02-17 10:11 GMT
மதுரையில் கஞ்சா விற்றதாக 3 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மதுரை:

மதுரை காளவாசல் பாண்டியன் நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாளுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்.

அப்போது கஞ்சா விற்றதாக ஆரப்பாளையம் கோபாலன் தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன் (வயது38), பைக்காரா மகாலிங்கம் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா, ரூ.600 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக ஆனையூர் முருகன் (59) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா, ரூ.270 மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News