செய்திகள்

திருப்பூர் மாநகரில் 7 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Published On 2019-02-15 10:13 GMT   |   Update On 2019-02-15 10:13 GMT
திருப்பூர் மாநகரில் 7 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருப்பூர்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி திருப்பூர் மாநகரில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் கோவை சரகத்துக்கும், மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் சேலம் மாநகருக்கும், வடக்கு மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலையரசி கோவை சரகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்திவேல் கோவை மாநகருக்கும், மாநகர குற்றப்பதிவேடு துறை இன்ஸ்பெக்டர் தனசேகரன் சேலம் மாநகருக்கும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பத்ருன்னிசா பேகம் சேலம் மாநகருக்கும், தெற்கு மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி கோவை மாநகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதுபோல் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜன், சிங்காநல்லூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன், ஊட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம், கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரமணி, கோவை மாநகர குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீலா, கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் திருப்பூர் மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News