செய்திகள்

பதவி பறிபோனது வருத்தமாக இருந்தது: திருநாவுக்கரசர்

Published On 2019-02-09 02:24 GMT   |   Update On 2019-02-09 02:24 GMT
முன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன். ஆனால் தன்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக இருந்ததாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress
சென்னை :

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

முன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன்.

புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரியுடன் இணைந்து செயல்படுவோம். ராகுல்காந்தியை பிரதமராக நாற்காலியில் உட்கார வைப்போம். அடுத்ததாக தமிழகத்தில் இருக்கும் ஊழல் கட்சியை அகற்ற வேண்டும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வேண்டும்.

கே.எஸ்.அழகிரிக்கு என்னுடைய பரிபூரண ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. என்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக தான் இருந்தது. ஆனால் தலைவர் ராகுல்காந்தியை நேரில் பார்த்த போது அந்த வருத்தம் காணாமல் போய்விட்டது. தற்போது தேர்தல் பிரசார குழுவில் இருக்கிறேன். விரைவில் தேர்தல் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார். #Thirunavukkarasar #Congress
Tags:    

Similar News