செய்திகள்

நாமக்கல்லில் நகர்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2019-02-02 17:50 GMT   |   Update On 2019-02-02 17:50 GMT
நாமக்கல்லில் நகர்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:

தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் நகர்புற வளர்ச்சிக்கான பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி நாமக்கல்லில் நகர்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்து முடிவுற்றது.

இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் டாக்டர் மணி, உதவி திட்ட அலுவலர் மாலதி, நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News