செய்திகள்

திருவண்ணாமலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை வைக்க பணிகள் தீவிரம்

Published On 2019-01-08 12:54 GMT   |   Update On 2019-01-08 12:54 GMT
திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகள் வைக்க அ.தி.மு.க.வினர். தீவிரம் காட்டி வருகின்றனர். #ADMK #MGR #Jayalalithaa
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பஸ்நிலையம் அருகே உள்ள நினைவுத்தூண் அருகே கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டன. கிரிவலப்பாதையில் இந்த சிலைகள் அனுமதியின்றி வைக்கபட்டதாக கூறி வருவாய்துறையினர் மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளை இரவோடு இரவாக அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏறுபடுத்தியது.

புதிய மாவட்ட செயலாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை ஒன்றிய அ.தி.மு.க. கூட்டம் நடந்தது.

இதில் திருவண்ணாமலை நகர பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மீண்டும் நிறுவப்படும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கான பணிகளில் அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறுகையில்:-

திருவண்ணாமலையில் சிலைகள் வைக்க இடம் தேர்வு செய்யபட்டுள்ளது. ஒரு சில நாட்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் நிறுவப்படும் என்றார். #ADMK #MGR #Jayalalithaa
Tags:    

Similar News