செய்திகள்

சினிமாவில் தவறாக சித்தரிக்கின்றனர்: மதுரைக்காரங்க பாசக்காரங்க- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2019-01-06 06:26 GMT   |   Update On 2019-01-06 06:26 GMT
மதுரைக்காரன் என்றால் கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது என்று சினிமாவில் தவறாக சித்தரிக்கின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரையில் தனியார் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விளையாட்டுத்துறையில் 8-ம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தோல்வியை கண்டு பயப்படாமல் ஓடினால் வாழ்க்கையில் சாதிக்கலாம். மாரத்தான் போட்டியில் சிறுவர் - சிறுமிகள் பங்கேற்பதன் மூலம் நட்பு, அன்பு, பாசம், உற்சாகம் மேம்படும்.

மதுரை மாநகரம், தொன்மை மற்றும் பாரம்பரியமிக்க நகரமாக மற்றவற்றுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. சினிமாவில் மதுரைக்காரன் என்றால் கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது என்று தவறாக சித்தரிக்கின்றனர். ஆனால் உண்மையில் மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள். பாசத்திற்காக எதையும் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News