செய்திகள்

கேரளாவில் போலி லைசென்சு வைத்திருந்த ஜீப் டிரைவர் கைது

Published On 2018-12-22 13:53 GMT   |   Update On 2018-12-22 13:53 GMT
கேரளாவில் போலி லைசென்சு வைத்திருந்த தமிழக ஜீப் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏல, தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வருகின்றனர்.

இவர்களை அழைத்து செல்வதற்காக ஜீப்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஜீப்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கம்பம் மெட்டு, கேரளா மோட்டார் வாகனதுறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு ஜீப் வந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜீப் டிரைவர் சிங்கராஜபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது24) என்பவரிடம் வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை சரிபார்த்தனர். அப்போது அது போலி லைசென்சு என தெரியவந்தது.

இது குறித்து உடும்பன்சோலை இணை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுங்கண்டம் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News