செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட கபடி போட்டி- அரும்பாவூர் அணி முதலிடம் பிடித்தது

Published On 2018-11-23 15:03 GMT   |   Update On 2018-11-23 15:03 GMT
தமிழ்நாடு அமெச்சூர்கபடிக் கழகம் சார்பில் பெரம்பலூரில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் அரும்பாவூர் அணியும், மகளிர் பிரிவில் மலையாளப்பட்டி அணியும் வெற்றிப் பெற்றனர்.
பெரம்பலூர்:

தமிழ்நாடு அமெச்சூர்கபடிக் கழகம் சார்பில் பெரம்பலூரில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் ஆண்கள்  பிரிவில் அரும்பாவூர் அணியும், மகளிர் பிரிவில் மலையாளப்பட்டி அணியும் வெற்றிப் பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான கபடி போட்டி ஆண்கள்/ பெண்கள் ஆகிய இரு பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவும், ஆண்களின் எடை 85 கிலோவிக்கும் மிகாமலும், பெண்களின் எடை 75 கிலோவிற்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது. இதன்படி மாவட்டத்தை சேர்ந்த 42 அணிகள் கலந்து கொண்டது. பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழக தலைவர் முகுந்தன் போட்டியினை தொடங்கி வைத்தார்.

இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் அரும்பாவூர் அணி முதலிடத்தையும், அம்மாபாளையம் அணி இரண்டாம்  இடத்தையும், பெரியம்மாபாளையம் மூன்றாம் இடத்தையும், பாடாலூர் அணி நான்காம் இடத்தையும் வென்றது.
இறுதி போட்டியில் மகளிர் பிரிவில் மலையாளப்பட்டி அணி முதலிடத்தையும், தழுதாழை அணி இரண்டாம்  இடத்தையும், அம்மாபாளையம் அணி மூன்றாம் இடத்தையும், அரும்பாவூர் அணி நான்காம் இடத்தையும் வென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஆண்களுக்கான போட்டியில் முதல்பரிசு தொகையாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு தொகையாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு தொகையாக தலா ரூ. 4 ஆயிரமும்,  
பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசு தொகையாக ரூ. 6 ஆயிரமும், இரண்டாம் பரிசு தொகையாக ரூ. 4 ஆயிரமும்,  மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு தொகையாக தலா ரூ.2 ஆயிரமும் ரொக்க பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.  முதலிடம் வென்ற 2 அணிகள் திருச்சி மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதிபெற்றது. #tamilnews
Tags:    

Similar News