செய்திகள்

கொடைக்கானலில் சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது

Published On 2018-11-21 10:51 GMT   |   Update On 2018-11-21 10:51 GMT
கொடைக்கானலில் சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் செண்பகனூர் அருகே உள்ள வைரவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் நாகராஜ் (வயது 14). மன நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவனிடம் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்ற காட்டுமணி (65) குடி போதையில் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார்.

சம்பவத்தன்று சிறுவனை தனியாக அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபட்ட போது அவன் கூச்சலிட்டான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காட்டு மணியை பிடித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் விசாரணை நடத்தியதில் காட்டு மணி சிறுவனிடம் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காட்டு மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News