செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2018-11-17 21:12 GMT   |   Update On 2018-11-17 21:12 GMT
எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #Egmore #RailwayStation
சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நோக்கி சென்ற சிர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர் வந்தது.

அந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை கண்டனர். அந்த பை குறித்து விசாரித்தபோது யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது அந்த பைக்குள் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கூறுகையில், “இந்த ஆண்டு(2018) இதுவரை ரூ.25 லட்சம் மதிப்பிலான 187 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கஞ்சா பையை கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
Tags:    

Similar News