செய்திகள்

பட்டாசு விபத்தில் சிக்கிய 6 வயது சிறுமிக்கு உதவிய ரத்ததான செயலி

Published On 2018-11-08 09:59 GMT   |   Update On 2018-11-08 09:59 GMT
சென்னை தி.நகரில் பட்டாசு விபத்தில் சிக்கிய 6 வயது சிறுமிக்கு அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்ட ரத்தத்தின் ரத்தமே செயலி மூலம் சரியான நேரத்தில் ரத்தம் கிடைத்தது.
சென்னை:

சென்னை தி.நகரை சேர்ந்தவர் பூங்கோதை. இவரது மகள் லாவண்யா (6). தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடி வைத்து விட்டு ஓடிவரும் போது மோட்டார் சைக்கிள் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தாள். தலையில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. உடனடியாக அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்ட ரத்தத்தின் ரத்தமே செயலி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதில் பதிவு செய்திருந்த ரத்ததான தன்னார்வலர்கள் மருத்துவமனைக்கு வந்து ரத்தம் வழங்கினார்கள். சரியான நேரத்தில் ரத்தம் கிடைத்ததால் சிறுமிக்கு ஏற்றப்பட்டது. இதற்காக சிறுமியின் தாய் பூங்கோதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றியை தெரிவித்தார்.
Tags:    

Similar News