செய்திகள்

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை- கணவர் குடும்பத்தினர் மீது புகார்

Published On 2018-10-23 12:03 GMT   |   Update On 2018-10-23 12:03 GMT
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து நகைகளை திரும்ப கேட்ட மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ சேகரன். இவரது மகள் அனிதாவுக்கும், சென்னை கிண்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 70 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை கொடுக்கப்பட்டது.

இவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் மணமகன் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு அனிதாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக கணவர் ராஜேஷ், அவரது பெற்றோர் போஸ்-ராஜம்மாள், சகோதரி கீதாமலர் உள்பட 6 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அனிதாவின் தந்தை ராஜசேகரன், மகளுக்கு வரதட்சணையாக கொடுத்த 81 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் மற்றும் பேத்தியை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளார்.

அப்போது கிண்டி போலீஸ் நிலையத்தில் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என ராஜேஷ் குடும்பத்தினர் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜசேகரன் விருதுநகர் 2-வது மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ராஜேஷ் உள்பட 6 பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News