செய்திகள்

திருப்பூரில் மளிகை கடை குடோனில் பதுக்கிய 1 டன் பான்மசாலா பறிமுதல்- கடை உரிமையாளர் கைது

Published On 2018-10-17 09:03 GMT   |   Update On 2018-10-17 09:03 GMT
திருப்பூரில் மளிகை கடை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் கைதானார்.
திருப்பூர்:

திருப்பூரில் பான்மசலா பதுக்கிய மளிகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூரில் குட்கா விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்யுமாறு போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூர் தாராபுரம் சாலையில் குப்புசாமிபுரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரசுராம் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் 500 கிலோ பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருப்பூர் ஏ.பி.டி. சாலை, தென்னம் பாளையம் டாஸ்மாக் மதுக்கடை அருகே சுயம்புலிங்கம் மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

கடையின் பின்பக்கம் உள்ள குடோனில் சோதனை செய்த போது மூட்டை, மூட்டையாக குட்கா உள்ளிட்ட 1 டன் பான்மசாலா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர்.

மற்றொரு அறையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 2.5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளையும் கைப்பற்றினார்கள்.

இது தொடர்பாக மளிகை கடை உரிமையாளர் வெள்ளியங்காடு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த லிங்கம் (47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News