செய்திகள்

பரமத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-10-04 17:04 GMT   |   Update On 2018-10-04 17:04 GMT
பரமத்தி பேரூராட்சி மற்றும் பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைபாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:

பரமத்தி பேரூராட்சி மற்றும் பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைபாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பரமத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், வட்டார சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம், பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பரமத்தி இலங்கை அகதிகள் முகாம் அருகே நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதாகைகளை ஏந்தியபடி சாலை பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் அவசியம் குறித்து கோஷமிட்டவாறு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பரமத்தி பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரமத்தி வட்டார சுகாதார துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News