செய்திகள்

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 10 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2018-09-21 07:13 GMT   |   Update On 2018-09-21 07:13 GMT
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 10 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:-

ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சசிகுமார்.

வேலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த கோபி.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ராஜகோபால் ஆகியோர் சாலை விபத்தில் காலமானார்கள்.

தேனி மாவட்டம், ராஜதானி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன்.

ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த லுக்காஸ்.

வடசேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த விஜயகுமார்.

சுசீந்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சொரிமுத்து.

திருவொற்றியூர் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மனோகரன்.

கல்லாவி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கார்த்திக் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள்.

தொண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகேசன் தீ விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்த 10 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami

Tags:    

Similar News