செய்திகள்

ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு புதிய எச்சரிக்கை

Published On 2018-09-18 06:07 GMT   |   Update On 2018-09-18 06:07 GMT
அவதூறு பரப்புபவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
சென்னை:

ரஜினி மக்கள் மன்றத்திற்கு அணிகள் பிரிக்கப்பட்டு மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழு மூலம் அவ்வப்போது தவறு செய்யும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் ரஜினியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் எடுக்கப்படுகிறதா? இல்லை தலைமை நிர்வாகிகள் தன்னிச்சையாக எடுக்கிறார்களா? என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ‘மாவட்டம் தோறும் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள், நிர்வாகிகள் நியமனம், பொறுப்பு மாற்றம், நீக்கம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் ரஜினியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் ஒப்புதலுக்கு பின்னரே அறிவிக்கப்படுகின்றன. ரஜினி ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.

இதுபோன்ற செய்திகளை பகிரும் நீக்கப்பட்ட உறுப்பினர்களிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. ஊடகக்குழுக்களில் அவதூறு பரப்பும் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram

Tags:    

Similar News