செய்திகள்

கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக்க பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டுவரப்பட்டதா ? - மம்தா பானர்ஜி

Published On 2018-09-14 16:03 GMT   |   Update On 2018-09-14 16:03 GMT
செல்லாத நோட்டுகளில் 99.3 சதவிகித நோட்டுகள் வங்கிக்கு திரும்பியது என்றால் கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக்கும் நோக்கில் பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டுவரப்பட்டதா ? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். #MamataBanerjee
கொல்கத்தா :

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

பாரதிய ஜனதா கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது 31 சதவிகித வாக்குகளை பெற்று 283 இடங்களை கைப்பற்றியது. ஆனால் அதைப்போலவே  அடுத்து வர உள்ள 2019 நாடாளுமன்ற தேர்தல் அமையாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது நாடு முழுவதும் இந்து கிளர்ச்சியாளர்கள் உருவாகிவிட்டனர். அவர்களால் பல்வேறு அப்பாவி பொதுமக்கள் அடித்து கொல்லப்பட்டுகின்றனர். நம் நாடு ஒற்றுமையாக இருக்கவே நாம் விரும்புகிறோம், எனவே இந்து கிளர்ச்சியாளர்களை ஆதரிக்க கூடாது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 99.3 சதவிகித செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்களுக்கு திரும்பிவிட்டன. அப்படியெனில்  பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டத்ற்கான தேவை என்ன ?, கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக்க தான் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதா ?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன ?

இவ்வாறு மத்திய அரசு மீது பல்வேறு கேள்வி கணைகளை மம்தா பானர்ஜி தொடுத்தார். #MamataBanerjee
Tags:    

Similar News