செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் மூலிகை மரங்கள் வளர்ப்பு

Published On 2018-09-13 16:49 GMT   |   Update On 2018-09-13 16:49 GMT
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
பனைக்குளம்:

தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனர் செந்தில்ராஜ், சித்த மருத்துவ துறை இணை இயக்குனர் பார்த்திபன் ஆகியோரின் ஆலோசனையின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பனைக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மூலிகை வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த கருவேல மரங்கள், குப்பை மேடுகளை அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்து, அங்கு 25-க்கும் மேற்பட்ட மூலிகை மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளன. அழிந்து வரும் மூலிகை இனங்களை மீட்டெடுக்க வேண்டும், பொதுமக்கள் மூலிகையின் பயன்பாட்டையும், அதன் நன்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சித்த மருத்துவ அலுவலர் ஸ்ரீமுக நாகலிங்கம் மற்றும் மருத்துவ அலுவலர் பாக்கியநாதன் ஆகியோர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மூலிகை வளாகம் சமூக ஆர்வலர் லாபிர் தலைமையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை பசுமை வளாகமாக விரிவுபடுத்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர் முல்லைக்கொடி ஊக்கப்படுத்தி வருகிறார். 
Tags:    

Similar News