செய்திகள்

மதுரையில் மீண்டும் மின்வெட்டு பொதுமக்கள் அவதி

Published On 2018-09-12 10:33 GMT   |   Update On 2018-09-12 10:33 GMT
மதுரையில் மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

மதுரை:

மதுரையில் மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

கடந்த 2010-ம் ஆண்டு தமிழகத்தில் அறிவிக்கப் படாத மின்வெட்டால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். பின்னர் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை இந்த மின்வெட்டு பலமணி நேரம் நீடித்தது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்- அமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா மின் வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன் என்று உறுதியளித்தார். அதன்படி, மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு மின் வெட்டு படிப்படியாக குறைந்தது.

கடந்த மாதம் வரை மின்வெட்டு எதுவும் இன்றி மாதந்தோறும் சீரமைப்பு பணிக்காக மட்டும் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு வந்தது.

மதுரை

மதுரையில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப் படாத மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பகல், இரவு வேளைகளில் 15 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பல்வேறு இடங்களில் மின்சப்ளை நிறுத்தப்படுகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி பொது மக்களும் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் எந்த வித பதிலும் தெரிவிப்பதில்லை.

மதுரையில் மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்படுத்தப் பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News