செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மண் லாரி மோதியதில் உரக்கடை வியாபாரி பலி

Published On 2018-09-11 17:42 GMT   |   Update On 2018-09-11 17:42 GMT
தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்ற போது கிராவல் மண் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோபிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மலைக்கோட்டை:

திருச்சி தில்லைநகர் 11-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது33). இவர் உரக்கடை நடத்தி வந்தார். கோபிநாத் நேற்று வியாபாரம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் வரை மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று மாலை திருச்சி நோக்கி புறப்பட்டு வந்தார்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் அருகே மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்றார். அப்போது கிராவல் மண் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோபிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மணப்பாறை அருகே நத்தம்பாடியை சேர்ந்த ராஜா (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். 
Tags:    

Similar News