செய்திகள்

7 பேரின் விடுதலை தமிழக அரசின் கையில்தான் உள்ளது - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

Published On 2018-09-09 08:33 GMT   |   Update On 2018-09-09 08:33 GMT
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தமிழக அரசின் கையில்தான் உள்ளது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். #RajivGandhimurdercase #Elangovan

அவனியாபுரம்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குறித்து ஏற்கனவே சோனியா காந்தி ‘‘மறப்போம், மன்னிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.

எனவே 7 பேர்களையும் விடுதலை செய்வது தமிழக அரசின் கையில்தான் உள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் விலை உயர்ந்து வருகிறது. இது விரைவில் ரூ.100-ஐ எட்டிவிடும்.


நாளை நடைபெறும் பந்த்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கின்றன.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது உரிமையாகும். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என்று கூறுகிறார். ஆனால் இதுவரை வர வில்லை.

தற்போது நடிகை கோவை சரளாவும் கட்சி ஆரம்பிக்க உள்ளார். மக்கள் செல்வாக்கு உள்ளதா என்று நடிகர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #RajivGandhimurdercase #Elangovan

Tags:    

Similar News