செய்திகள்

கருணாநிதியை தவிர்த்துவிட்டு திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது - துரைமுருகன்

Published On 2018-08-30 13:54 GMT   |   Update On 2018-08-30 14:25 GMT
கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது என பேசினார். #KarunanidhiCondolenceMeeting
சென்னை :

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, பிரஃபுல் பட்டேல், ஃபரூக் அப்துல்லா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கி.வீரமணி, வைகோ, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

கூட்டத்தில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் ஆங்கிலத்தில் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

கருணாநிதி ஒரு அறிவாளி, மெய் மறக்க செய்யும் வகையில் பேசும் திறன் பெற்றவர். அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர். அகில இந்திய அரசியலில் ஆளுமை பெற்றவர் கருணாநிதி. வங்கிகளை தேசியமயமாக்கலாம் என்ற பொருளாதாரக் கொள்கையை அறிவித்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. கருணாநிதி சிறந்த பேச்சாளர், சிறந்த வசனகர்த்தா.

சிறந்த நிர்வாகி, கட்சியை திறம்பட கட்டிக் காத்தவர். மனித மனங்களைப் புரிந்து கொண்ட மகத்தான மனிதர் கருணாநிதி. 50 ஆண்டுகள் திமுகவை திறம்பட தலைமை தாங்கி நடத்தியவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. செம்மொழி தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர் கருணாநிதி

இந்திய அரசியல் அரங்கில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது என கூறினார்.

தெலுங்குதேசம் எம்.பி. ஒய்.எஸ்.சவுத்ரி பேசும் போது பன்முக திறமை கொண்டவர் கருணாநிதி. கருணாநிதியின் இடத்தை யாரும் பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்தார். #KarunanidhiCondolenceMeeting
Tags:    

Similar News