செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

Published On 2018-08-27 11:33 GMT   |   Update On 2018-08-27 11:33 GMT
வந்தவாசி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வேன் விபத்துகுள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வந்தவாசி:

வந்தவாசி அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருள் (40) சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.

இந்த வேனில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் வந்தவாசியில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரவி இவரது மனைவி பூங்கொடி (40) அம்மு (40) செல்லம்மாள் (50) முனியம்மாள் (45) சக்கரபாணி ( 29) பாண்டியன் (45) முருகம்மாள் (45) செல்வி (50) பாக்கியம் (45) உள்ளிட்ட 15 பேர் பயணம் செய்தனர்.

வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலை ஆயிலவாடி கூட்டுச் சாலை அருகே வோன் வந்த போது எதிர்பாராத விதமாக பின் சக்கரம் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி அருகில் உள்ள சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த பூங்கொடி உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். வேனை ஓட்டி வந்த அருள் காயமடைந்தார். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பூங்கொடி, முருகம்மாள், இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News