செய்திகள்

முக்கொம்பு மேலணை மதகுகள் உடைப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை இல்லை என ஆய்வுக்குப்பின் ஆட்சியர் தகவல்

Published On 2018-08-22 18:21 GMT   |   Update On 2018-08-22 18:21 GMT
முக்கொம்பு மேலணையின் 8 மதகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை இல்லை என அங்கு ஆய்வு நடத்திய பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். #Cauvery #Mukkombu
திருச்சி :

திருச்சி - சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு மேலணை உள்ளது. 1836-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட முக்கொம்பு மேலணை 182 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த அணையில் தண்ணீர் திறப்பதற்காக 45 மதகுகள் உள்ளன. அதில், 8 மதகுகள் வெள்ளத்தால் உடைந்தன. உடைந்த 8 மதகுகளும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்க பயன்படுத்தப்பட்டவையாகும்.

8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அணையில் இருந்து சுமார் 90,000 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அங்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், மதகுகள் உடைந்த நிலையில் அணையின் கீழ்பாலத்தின் நடுவே உள்ள ஒரு பகுதியும் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.



இந்நிலையில், அணையின் மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து திருச்சி ஆட்சியர் ராசாமணி அங்கு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறுகையில், மதகுகள் உடைந்திருந்தாலும் நீர் திறப்பு குறைவு என்பதால் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், நாளை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, மறு சீரமைப்பு பணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #Cauvery #Mukkombu
Tags:    

Similar News