செய்திகள்

மேற்கு கோவிந்தாபுரத்தில் குடிநீர் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

Published On 2018-08-17 10:33 GMT   |   Update On 2018-08-17 10:33 GMT
மேற்கு கோவிந்தாபுரத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 7, 9-வது வார்டுகளுக்கு உட்பட்டது துரைராஜநகர், வரதராஜபுரம், சுப்பிரமணியபுரம், நாயக்கர்புதுதெரு ஆகிய பகுதகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

ஆனால் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று அந்த மக்கள் புகார் தெரிவித்தனர். குடிநீர் குறித்து புகார் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 18004254181 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு போன் செய்தால் யாரும் எடுப்பது இல்லை.

அப்படியே எடுத்தாலும் அங்குள்ளவர்கள் இன்று விடுமுறை. அப்புறம் பேசுங்கள் என்று மக்களை புறக்கணிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அந்த பகுதி மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர். குடிநீர் சீராக வழங்காவிட்டால் மாநகராட்சி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News